Homeசெய்திகள்சினிமாரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி.... ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

ரொமான்ட்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டனி…. ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

-

- Advertisement -

பிரபல இசை அமைப்பாளரான விஜய் ஆண்டனி தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் பிச்சைக்காரன் 2 மற்றும் கொலை திரைப்படம் வெளியானது. மேலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது விநாயகர் வைத்தியநாதன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘ரோமியோ‘ என்ற தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவரை ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வந்த விஜய் ஆண்டனி இந்த படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிர்நாலினி ரவி நடிக்கிறார். குட் டெவில் நிறுவனத்தின் சார்பில் விஜய் ஆண்டனி படத்தை தயாரிக்கிறார். தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் இப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ