விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி தற்போது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ‘வள்ளி மயில்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் ‘அருவி’ படத்தின் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் சக்தித் திருமகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை விஜய் ஆண்டனி தானே தயாரித்து, இசையும் அமைத்திருந்தார்.
செல்லி ஆர். காலிஸ்ட் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக திருப்தி ரவீந்தரா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து வாகை சந்திரசேகர், காதல் ஓவியம் சுனில், செல் முருகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அரசியல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படமானது கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமாக அமைந்து ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஆனாலும் கதைக்களத்தில் புதுமை இல்லாமல் போனதால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் இப்படம் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


