Homeசெய்திகள்சினிமாதூள் கிளப்பும் கில்லி... இயக்குநருடன் படம் பார்த்த விஜய் அம்மா...

தூள் கிளப்பும் கில்லி… இயக்குநருடன் படம் பார்த்த விஜய் அம்மா…

-

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த கில்லி படம் கடந்த 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழ் திரையுலகில் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. கோலிவுட்டின் அடையாளங்களில் ஒரு முக்கியப் படமாக அமைந்தது கில்லி திரைப்படம். இத்திரைப்படம் விஜய்யின் சினிமா வாழ்வில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது. வேலு, தனலட்சுமி, முத்துப்பாண்டி ஆகிய கதாபாத்திரங்கள் இன்று வரை தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் கதாபாத்திரங்களாக மாறின.

இத்திரைப்படத்தை தரணி இயக்கி இருந்தார். கில்லி படத்திற்கு முன்பாக எதிரும், புதிரும், தில்,, தூள் ஆகிய படங்களை இயக்கினார். இதில் விக்ரம் நடித்த தில், தூள் இரண்டுமே மாபெரும் ஹிட் படங்களாக அமைந்தன. இதைத் தொடர்ந்து அவர் இயக்கி குருவி மற்றும் ஒஸ்தி படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்து கடந்த 13 ஆண்டுகளாக படங்கள் எதுவும் அவர் இயக்கவில்லை. தற்போது கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் தரணி, ரசிகர்களுடன் சேர்ந்து கண்டு ரசித்துள்ளார். அவருடன் படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜானகியும் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். கில்லி ரி ரிலீஸூக்கு பிறகு மீண்டும் தரணி படம் இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டும் கில்லி திரைப்படம் சுமார் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

MUST READ