spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிக்கும் 'தங்கலான்'..... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’….. இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

-

- Advertisement -

விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'..... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!

நடிகர் விக்ரம் தற்போது தனது 62 வது படமான வீர தீர சூரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தனது 63வது திரைப்படத்தை சாந்தகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. விக்ரம் நடிக்கும் 'தங்கலான்'..... இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்!அதை தொடர்ந்து நேற்று (ஜூலை 17) படத்தின் முதல் பாடலும் வெளியிடப்பட்டு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதேசமயம் தங்கலான் திரைப்படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாக்கியுள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி இதன் இசையை வெளியீட்டு விழா நடைபெறும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

MUST READ