Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்'...... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’…… இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

-

விக்ரம் நடிப்பில் உருவாகும் வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் விக்ரம் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதற்கு முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்'...... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!அடுத்ததாக நடிகர் விக்ரம் தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி வி பிரகாஷ் இதற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்க உள்ளார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சித்திக், சுராஜ்
வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். விக்ரம் நடிக்கும் 'வீர தீர சூரன்'...... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!அதைத்தொடர்ந்து படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட்டிருந்தனர். அதன்படி இந்த படத்திற்கு வீர தீர சூரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் இரண்டாம் பாகமாக வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இடைவெளி இல்லாத படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் படத்தினை 2025 இல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

MUST READ