spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதங்கலான் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது

தங்கலான் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது

-

- Advertisement -
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் தங்கலான் படத்தின் வெளியீட்டை படக்குழு ஒத்திவைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குநராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குநர் பா ரஞ்சித். தமிழ் சினிமாவை மாறுபட்ட கோணத்தில் காட்ட முயலும் முக்கிய இயக்குநர் அவராவார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்த பா ரஞ்சித், முதல் படத்திலேயே வெற்றி கண்டார். இதை தொடர்ந்து கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். ஒரு மதில் சுவரும், அதை சுற்றி நடக்கும் அரசியலையும் அசராமல் திரையில் காட்டி ரசிகர்களை அசரடித்தார். இதையடுத்து, ரஜினியை வைத்து காலா மற்றும் கபாலி ஆகிய பிளாக் பஸ்டர் திரைப்படங்களை எடுத்தார். இயக்கம் மட்டுமன்றி தயாரிப்பிலும் பா ரஞ்சித் கவனம் செலுத்தி வருகிறார்.

we-r-hiring
தற்போது அவரது இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹாலிவுட் நடிகர் டேனியல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது. முதலில் பொங்கல் பண்டிகைக்கு படம் வௌியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாகவும், ஏப்ரல் மாதம் தங்கலான் படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

MUST READ