Homeசெய்திகள்சினிமாபக்கா பிளானுடன் களமிறங்கும் விஷால்.... துப்பறிவாளன் 2 பட அப்டேட்!

பக்கா பிளானுடன் களமிறங்கும் விஷால்…. துப்பறிவாளன் 2 பட அப்டேட்!

-

விஷாலின் துப்பறிவாளன் 2 பட அப்டேட்!விஷாலின் சிறந்த படங்களில் துப்பறிவாளன் படம் ஒரு முக்கியமான இடத்தை பிடித்திருக்கும். கமர்சியல் சினிமாக்களை தவிர்த்து விஷாலின் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இப்படம் வெளியானது. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். அரோல் கொரோலி இசையமைத்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியின் காரணமாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்தனர். துப்பறிவாளன் 2 படத்தையும் மிஷ்கின் தான் இயக்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன. துப்பறிவாளன் 1 படத்தை தயாரித்த விஷால் துப்பறிவாளன் 2 படத்தையும் தயாரிக்க தொடங்கினார். ஆனால் விஷால் மற்றும் மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு முடியும் முன்னரே படத்தில் இருந்து மிஷ்கின் விலகிக் கொண்டார். அதன் பிறகு விஷால் தானே இயக்கி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்து வந்தது. பின்னர் இப்ப படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவரவில்லை. சமீபத்தில் விஷால், ஹரி கூட்டணியில் உருவாக உள்ள ரத்னம் படத்தின் அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஷாலின் துப்பறிவாளன் 2 பட அப்டேட்!இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த பின்னர் தான் துப்பறிவாளன் 2 படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் விஷால் சமீபத்தில் மும்பைக்கு சென்று பாலிவுட் நடிகர்கள் சிலரிடம் துப்பறிவாளன் 2 படத்தில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் துப்பறிவாளன் 2 படம் சம்பந்தமான அப்டேட்டுகள் விஷாலின் 34 வது படமான ரத்னம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பறிவாளன் 2 படத்தில் விஷாலுடன் இணைந்து பிரசன்னா, ரஹ்மான், கௌதமி மற்றும் பலர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ