Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்!

இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்!

-

பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

இயக்குனர் விஷ்ணுவர்தன் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின் அறிந்தும் அறியாமலும், பட்டியல்,
அஜித் நடிப்பில் வெளியான பில்லா ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். இந்த புதிய படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கிறது.ரொமான்டிக் காதல் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை இ சி ஆர் பகுதிகளில் நடைபெற்ற இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் லிஸ்பான், போர்ச்சுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த அடுத்த கட்ட படப்பிடிப்புகளும் இந்த மாதம் இறுதி வரை நடக்கும் என கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ