Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'VJS51' பட அப்டேட்!

இன்று வெளியாகும் ‘VJS51’ பட அப்டேட்!

-

மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதன் பிறகு தனது கடின உழைப்பினால் ஹீரோவாக உருவெடுத்தார். மேலும் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இன்று வெளியாகும் 'VJS51' பட அப்டேட்!அதன்படி இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை விட வில்லனாகவும் நடிக்கும் படங்கள் தான் அதிக வசூலை வாரிக் குவிக்கின்றன. அடுத்ததாக விஜய் சேதுபதி மகாராஜா, விடுதலை 2, ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் விஜய் சேதுபதி தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் எனும் திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். VJS51 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை 7CS என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் ஆறுமுக குமார் தான் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி, யோகி பாபு, அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி முழுவதும் நிறைவடைந்துவிட்டது.

அதைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகும் என படத்தில் உள்ள அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அனேகமாக இந்த அப்டேட், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில்லாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்திற்கு சத்தியமா பொய் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வந்தது. பின்னர் இந்த தலைப்பை மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

MUST READ