Homeசெய்திகள்சினிமா'மொத ராத்திரி' திரைப்படம் ஒரு நம்பிக்கை வரவு: இயக்குநர் த.செ.ஞானவேல் பாராட்டு!

‘மொத ராத்திரி’ திரைப்படம் ஒரு நம்பிக்கை வரவு: இயக்குநர் த.செ.ஞானவேல் பாராட்டு!

-

- Advertisement -

திருமண வீடுகளில் அரங்கேறும் மூடநம்பிக்கைகள் மற்றும் அபத்தங்களை நகைச்சுவையோடு தோலுரித்துக் காட்டியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்திற்கு, பிரபல இயக்குநர் த.செ.ஞானவேல் மனம் திறந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இப்படம் வெளியான அனைத்துத் தரப்பு மக்களிடமும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், திரையுலகப் பிரபலங்களின் பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.'மொத ராத்திரி' திரைப்படம் ஒரு நம்பிக்கை வரவு: இயக்குநர் த.செ.ஞானவேல் பாராட்டு!

வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போன்ற காட்சியமைப்புகள்
‘மொத ராத்திரி’ படம் குறித்து இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள பாராட்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “ஓடிடி தளத்தில் இப்படம் வெளியான பிறகும் கூட, திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவின்றி இருப்பது படத்தின் வெற்றிக்குச் சான்றாகும். திருமண வீடுகளில் நடக்கும் பல்வேறு அபத்தங்களை, வாழைப்பழத்தில் ஊசி இறக்குவதுபோல மிக ஆழமாகப் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களைச் சிரிக்கவும் வைக்கிறது; சிந்திக்கவும் வைக்கிறது. இப்படத்தில் பணியாற்றியுள்ள அனைத்துத் திறமைசாலிகளும் சேர்ந்து ரசிகர்களுக்கு ஒரு திரைக் விருந்தையே படைத்துள்ளனர்.”

we-r-hiring

தமிழ் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கை வரவு
மேலும், இப்படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமியின் பணியைப் பாராட்டிய ஞானவேல், “படத்தைப் போலவே, இயக்குநர் அளித்துள்ள நேர்காணல்களுக்கும் நான் ஒரு ரசிகனாகிவிட்டேன். ராஜா கருப்பசாமி தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்வரவு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான ஒரு பெரிய நம்பிக்கை வரவு” என்று தெரிவித்துள்ளார்.  இயக்குநர் த.செ.ஞானவேலின் இந்தச் சிறப்பான பாராட்டு, ‘மொத ராத்திரி’ படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தைத் அளித்துள்ளதோடு, திரையுலகில் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

வெளியான 10 நாட்களில் ரூ.100 கோடி வசூல்! வெற்றிநடை போடும் சூரியின் ‘மண்டாடி’!

MUST READ