Homeசெய்திகள்சினிமா'தக் லைஃப்' படத்தில் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தது அந்த நடிகரா?

‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தது அந்த நடிகரா?

-

- Advertisement -

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் – கமல் கூட்டணியில் நாயகன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து மணிரத்னம், கமல்ஹாசன் இணைந்து தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருந்தது. 'தக் லைஃப்' படத்தில் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தது அந்த நடிகரா?இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று (ஜூன் 5) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் ஆரம்பத்தில் விண்டேஜ் காட்சிகளுடன் தொடங்கினாலும், கதை நகர நகர சலிப்பை ஏற்படுத்தியது. 'தக் லைஃப்' படத்தில் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தது அந்த நடிகரா?இருப்பினும் கமல் – சிம்பு இடம்பெறும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இப்படம் வழக்கமான மணிரத்னம் படம் போல் இல்லை என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் சிம்புவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார்? என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது ஆரம்பத்தில் தக் லைஃப் படத்தில் ரவி மோகன், துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிக்க இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் மூவரும் படத்திலிருந்து விலகிவிட்டனர். அதில் ரவி மோகனின் கதாபாத்திரமானது நீட்டிக்கப்பட்ட கேமியோவாக இருந்தது. 'தக் லைஃப்' படத்தில் சிம்பு கேரக்டரில் நடிக்க இருந்தது அந்த நடிகரா?அவருடைய கதாபாத்திரம் படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெறுவது போல் கதை இருந்தது. அதன் பின்னர் ரவி மோகன் விலகியதால் அவருக்கு பதிலாக சிம்பு என்ட்ரி கொடுத்ததால், அவருடைய கேரக்டர் கமல்ஹாசனின் கேரக்டருக்கு சமமாக வடிவமைக்கப்பட்டதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சிம்புவின் கேரக்டர் அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

MUST READ