spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

-

- Advertisement -

வா வாத்தியார் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி தற்போது சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் கைதி 2, கார்த்தி 29 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. இதற்கிடையில் இவர் சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் கார்த்தி, எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் ராஜ் கிரண், சத்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி ஏறத்தாழ படப்பிடிப்புகள் நிறைவடைந்து நிலையில் இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு எப்போது?இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்பது போன்ற பேச்சுகள் அடிபடுகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது நாளை (மே 25) நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் வா வாத்தியார் படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த போஸ்டரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ