spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசூர்யா 45' படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?

சூர்யா 45′ படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சூர்யா 45 படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யா 45' படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது?

சூர்யா நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது தவிர சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும், வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா 46 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா.ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் 'சூர்யா 45' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். ஜிகே விஷ்ணு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா, வழக்கறிஞராக நடிக்க அவருடன் இணைந்து திரிஷா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் பொள்ளாச்சி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.சூர்யா 45' படத்தின் டைட்டில் ரிலீஸ் எப்போது? மேலும் இந்த படத்திற்கு பேட்டைக்காரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இப்படமானது 2025 தீபாவளிக்கு திரைக்கு வரும் எனவும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் ரிலீஸ் 2025 ஜூலை மாதம் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ