Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு எப்போது?..... லேட்டஸ்ட் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவு எப்போது?….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்தது. சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு எப்போது?..... லேட்டஸ்ட் அப்டேட்!அதே சமயம் சிவகார்த்திகேயன் , ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அமரன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். ராணுவத்தின் பின்னணியில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், முகுந்த் V என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல்பிலும் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். கடந்த ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு காஷ்மீர் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படப்பிடிப்பு நிறைவு எப்போது?..... லேட்டஸ்ட் அப்டேட்!  மேலும் இந்த படமானது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் அமரன் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரை தொடர்ந்து ஊட்டியில் மூன்று நாட்கள் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. அதன் பின்னர் மூணாறில் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் அங்கு ஒரு வார படப்பிடிப்புக்கு பின்னர் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்தப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ