நடிகர் கவின், சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமாகி பின்னர் வெள்ளித்திரையிலும் நுழைந்து தற்போது பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் டாடா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து நடிகர் கவின், இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இதில் கவின் உடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற மே 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் நடிகர் கவின் இந்த படத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக கேமியோ ரோல் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஆகவே ஸ்டார் படத்தில் யார் கேமியா ரோலில் நடித்திருப்பார் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் நடிகர் சிவகார்த்திகேயன் அல்லது நடிகர் சிம்பு இவர்களில் யாரேனும் ஒருவர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -