Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் டி.என்.ஏ.... முதல் தோற்றம் ரிலீஸ்..

அதர்வா நடிக்கும் டி.என்.ஏ…. முதல் தோற்றம் ரிலீஸ்..

-

- Advertisement -
நடிகர் அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நடிக்கும் ‘DNA’ படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

தமிழ் திரையுலகில் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா. இவர் 90-களில் திரையுலகை தன் நடிப்பால் கலக்கிய டாப் நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார். இவருக்கு தம்பி ஆகாஷ் உள்ளார். பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான அதர்வா, முதல் படத்திலேயே தன் அசத்தலான நடிப்பால் முத்திரை பதித்தார். முதல் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

தொடக்கத்தில் காதல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்த அதர்வா,, அடுத்தடுத்து கமர்ஷியல் மற்றும் ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இறுதியாக அவரது நடிப்பில் மத்தகம் என்ற இணைய தொடர் வெளியானது 100, ட்ரிகர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அதர்வா இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதர்வாவிற்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் கௌதம் வாசுதேவ் மேனன் திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நிறங்கள் மூன்று படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் டி.என்.ஏ. இத்திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடித்திருந்தார் இத்திரைப்படத்தை, நெல்சன் வெங்கட் இயக்கி இருக்கிறார். இன்று அதர்வாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

MUST READ