நடிகர் பார்த்திபன், அரசியல் களம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவில் புதுமைகளை கையாளக் கூடியவர். அந்த வகையில் தனித்துவமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘இட்லி கடை’ திரைப்படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இது தவிர நான் தான் சிஎம் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார் பார்த்திபன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அரசியல் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் பார்த்திபன் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மனசுக்குள்ள வீராப்பு இருக்கிறவன் மட்டும் அரசியல் பண்ண முடியாது. நல்ல எண்ணம் இருக்கிறவன் மட்டும் அரசியல் பண்ண முடியாது.
அரசியல் என்பது வேறு ஒரு களம். அதை யாருமே கண்டுபிடிக்க முடியாதுன்னு இருக்கும்போதுதான் எம்.ஜி.ஆர் வீரியமா வெளிய வந்தாரு. ஆனால் இன்றைய சூழல் அப்படி இல்லை. அதே சமயம் நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை. யார் வந்தாலும் வரவேற்கிறேன். போட்டி பயங்கரமாக இருந்தால் தான் வெற்றி நியாயமாக இருக்கும்” என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
- Advertisement -