spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'STR 49' ப்ரோமோ ஒத்திவைப்பு.... அப்செட்டில் ரசிகர்கள்!

‘STR 49’ ப்ரோமோ ஒத்திவைப்பு…. அப்செட்டில் ரசிகர்கள்!

-

- Advertisement -

STR 49 படத்தின் ப்ரோமோ ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.'STR 49' ப்ரோமோ ஒத்திவைப்பு.... அப்செட்டில் ரசிகர்கள்!

‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு சிம்பு தனது 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்க இருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. அதே சமயம் ‘STR 49’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படமானது வடசென்னை யுனிவர்ஸாக உருவாகும் எனவும், இது இரண்டு பாகங்களாக உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். மேலும் அனிருத் இதன் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளாராம். 'STR 49' ப்ரோமோ ஒத்திவைப்பு.... அப்செட்டில் ரசிகர்கள்!இவ்வாறு படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அதே சமயம் இந்த படத்திற்காக சிம்பு தனது தோற்றத்தையும் மாற்றியுள்ளார். வெற்றிமாறன், சிம்புவை நிச்சயம் வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் STR 49 படத்தின் புதிய ப்ரோமோ வருகின்ற அக்டோபர் 4 (நாளை) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ப்ரோமோ தற்போது ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும், தீபாவளிக்கு முன் இந்த ப்ரோமோவை சமூக வலைதளங்களிலும், தியேட்டர்களிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

we-r-hiring

அந்த பதிவில், “STR 49 படத்தின் முன்னோட்டம் திரையரங்குகளிலும் சமூக வலைதளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடு செய்யும் நிகழ்வாக அமையும். ஆகையால் சென்சார் பணிகள் முடிந்து விரைவில் உங்கள் கண்முன்னே அந்த மாபெரும் முன்னோட்டம் வெளிவர உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் நாளை வெளியாக இருந்த STR 49 படத்தின் ப்ரோமோ தள்ளிப்போனது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

MUST READ