அருள்நிதி நடிக்கும் ராம்போ படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான ‘வம்சம்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. அதைத் தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்ட்டி காலனி, இரவுக்கு ஆயிரம் கண்கள், டைரி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவர், ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், RAMBO – ராம்போ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் அருள்நிதி பாக்ஸராக நடிக்க அவருடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், விடிவி கணேஷ், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி நேரடியாக சன் நெக்ஸ்ட் தளத்தில் இப்படம் வெளியாக இருக்கிறது.
No mercy. No limits. No escape. Fury has a name… and it’s RAMBO.
Arulnithi is RAMBO. Raw, Relentless, and Unstoppable.Trailer out now.
🎬 Premieres Oct 10 | Only on SunNXT#DirectToOTT #RamboOnSunNXT #SunNXTExclusive #TamilMoviePremiere #FightForTruth #Arulnithi… pic.twitter.com/CRlyyUnTaP— SUN NXT (@sunnxt) October 4, 2025

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலரை பார்க்கும்போது இந்த படம் ஆக்சன் கலந்த படமாக உருவாகி இருப்பது போல் தெரிகிறது. மேலும் முத்தையா வழக்கமான கிராமத்து கதை போல் இல்லாமல் புதிய முயற்சியை கையில் எடுத்திருப்பார் போல் தெரிகிறது. இந்த ட்ரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.