spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'போர் தொழில்' இயக்குனரின் அடுத்த சம்பவம்..... 'D54' ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

‘போர் தொழில்’ இயக்குனரின் அடுத்த சம்பவம்….. ‘D54’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

-

- Advertisement -

D54 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'போர் தொழில்' இயக்குனரின் அடுத்த சம்பவம்..... 'D54' ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘போர் தொழில்’ திரைப்படம் வெளியானது. சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் ஆகியோர் நடித்திருந்த இந்த படம் ‘ராட்சசன்’ படத்திற்கு பிறகு தரமான க்ரைம் திரில்லர் படமாக அமைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் ராஜா என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தனுஷை வைத்து புதிய படம் இயக்கப் போகிறார் என்று அறிவிப்பு வெளியானது.'போர் தொழில்' இயக்குனரின் அடுத்த சம்பவம்..... 'D54' ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! தற்காலிகமாக D54 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜூ, கருணாஸ், ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, ப்ரித்வி பாண்டியராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. பரபரப்பான திரைக்கதையில் எமோஷனல் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
'போர் தொழில்' இயக்குனரின் அடுத்த சம்பவம்..... 'D54' ரிலீஸ் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சமீபத்தில் நடந்த பேட்டியில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி 2026 பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருவதாக கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ