Homeசெய்திகள்சினிமாஅஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்?

அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்?

-

- Advertisement -

அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்?

அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து 2025 ஏப்ரல் 10ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகின்றன. இந்தப் படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி.வி. பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதன் பின்னர் அஜித்தின் 64வது படத்தை யார் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்?அதன்படி விஷ்ணுவரதன், பிரசாந்த் நீல், சிறுத்தை சிவா ஆகியோரின் பெயர்கள் அஜித்தின் லைன் அப்பில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் கிடைத்த தகவல் என்னவென்றால் கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ், அஜித்தை நேரில் சந்தித்து கதை ஒன்றை சொல்லியதாகவும் அந்த கதை அஜித்துக்கு பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது. எனவே தனுஷ் இயக்கத்தில் அஜித் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.அஜித் நடிப்பில் தனுஷ் இயக்கும் புதிய படத்தின் தயாரிப்பாளர் யார்? அதுமட்டுமில்லாமல் இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்க போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு படத்தில் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும் நிலையில் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க போவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ