Homeசெய்திகள்சினிமாமோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து

மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து

-

- Advertisement -
மோகன்லால் நடிப்பில் நாளை வெளியாக உள்ள மலைக்கோட்டை வாலிபன் படத்திற்கு நடிகர் யோகி பாபு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோலிவுட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் போல, மோலிவுட்டுக்கு லாலேட்டன் என்று தான் சொல்ல வேண்டும். அன்று தொடங்கி இன்று வரை மலையாள திரையுலகை கட்டி ஆள்கிறார் மோகன்லால். இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார் மோகன்லால். இறுதியாக ரஜினியுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தில் தமிழில் நடித்திருந்தார். அப்படமும், அதில் இடம்பெற்ற அவரது கதாபாத்திரமும் வரவேற்பு பெற்றது. மலையாள நடிகராக இருந்தாலும், அவ்வப்போது கதைக்கு தேவைப்பட்டால், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து நெரு திரைப்படம் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியானது. இப்படம் சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து பிருத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் இரண்டாம் பாகத்தில் அவர் நடித்து வருகிறார். இதனிடையே மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் மலைக்கோட்டை வாலிபன். ஜல்லிக்கட்டு, சுருளி, அங்கமாலி டைரிஸ் பட இயக்குநர் லிஜோ ஜோஸ் இயக்கி இருக்கிறார். இதில் மோகன்லாலுடன் சோனாலி குல்கர்ணி, மணிகண்டன் ஆர் ஆச்சாரி, ஹரிஷ் பேரழி ஆகியோர் நடித்துள்ளனர்

இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு அடைந்து படம் நாளை வெளியாக உள்ளது. கேரளாவில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ஒரு லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் வெளியீட்டுக்கு முன்பே ஒரு கோடி ரூபாய் வசூல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நடிகர் யோகி பாபு, மோகன்லால் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

MUST READ