spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநீங்கள் தனுஷ் சாயலில் இருப்பது நிறையா? குறையா?.... பிரதீப் ரங்கநாதனின் பதில்!

நீங்கள் தனுஷ் சாயலில் இருப்பது நிறையா? குறையா?…. பிரதீப் ரங்கநாதனின் பதில்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதைத் தொடர்ந்து இவர் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். நீங்கள் தனுஷ் சாயலில் இருப்பது நிறையா? குறையா?.... பிரதீப் ரங்கநாதனின் பதில்!இந்த படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பிறகு பிரதீப், ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அதன்படி இப்படம் 10 நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. எனவே இப்படத்தின் வெற்றி விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது பிரதீப் ரங்கநாதனிடம் தனுஷ் சாயலில் இருப்பது உங்களுக்கு நிறையா? குறையா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரதீப், “நான் கண்ணாடியை பார்க்கும்போது நான் என்னை தான் பார்க்கிறேன். நான் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளன” என்று பேசினார். நீங்கள் தனுஷ் சாயலில் இருப்பது நிறையா? குறையா?.... பிரதீப் ரங்கநாதனின் பதில்!அதைத்தொடர்ந்து இதே கேள்விக்கு அஸ்வத் மாரிமுத்து, “பிரதீப்பை நான் பார்க்கும்போது அவர் பிரதீப்பாக தான் எனக்கு தெரிகிறார். இதுபோன்ற கேள்விகள் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக கேட்கப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன், பிரதீப் ரங்கநாதனாக தான் இருக்கிறார். அவர் வேறு யாரும் மாதிரியும் இல்லை” என்று பதிலளித்தார்.

MUST READ