spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமங்காத்தா மாதிரியே தளபதி 68-ல பிஜிஎம் வேற மாறி இருக்கும்… யுவன் சங்கர் ராஜா கொடுத்த...

மங்காத்தா மாதிரியே தளபதி 68-ல பிஜிஎம் வேற மாறி இருக்கும்… யுவன் சங்கர் ராஜா கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதை தொடர்ந்து தளபதி விஜய் தனது 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் விஜயுடன் தமன்னா, கிரித்தி ஷெட்டி, ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

we-r-hiring

இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படம் அரசியல் கலதக்களத்தில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்திற்கு CSK என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு விஜயின் புதிய கீதை படத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து யுவன் சங்கர் ராஜா தளபதி 68-ல் இசையமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் யுவன் சங்கர் ராஜா, “தளபதி 68ல் கமிட்டாகியுள்ளது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துக்கு கொடுத்தது போலவே விஜய்க்கும் சிறப்பான பிஜிஎம் கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

MUST READ