spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த யுவன் சங்கர் ராஜா!

விஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த யுவன் சங்கர் ராஜா!

-

- Advertisement -

பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று விஜய் ஆண்டனி மகள் மீராவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

மீராவின் மறைவிற்கு திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விஷால், பிரபு தேவா, அனிருத், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், ரித்திகா சிங், கார்த்தி, சந்தானம், குஷ்பூ, சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும், ட்விட்டரில் தங்களின் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில்,” விஜய் ஆண்டனியின் இழப்பை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். ஒரு தந்தையாக விஜய் ஆண்டனி இப்போது என்ன வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. இந்த தாங்க முடியாத இழப்பை அந்தக் குடும்பத்தினர்
தாங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன்  சக்தியை கொடுக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ