க்ரைம்

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

Published by
Veera
Share

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

வேல் டெக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணினி பொறியியல் படிக்கும் மாணவன் தாசரிபவன்-19 மற்றும் இவரின் நண்பர்கள் மூவர் வெள்ளனூர் ஏரியில் குளிப்பதற்கு வந்துள்ளனர். குளிப்பதற்கு முன் மது அருந்தி உள்ளனர்.

வேல் டெக் கல்லூரி மாணவர் வெள்ளனூர் ஏரி நீரில் மூழ்கி பலி

இதில் தாசரிபவன்  மது அருந்திவிட்டு குளிப்பதற்காக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார் உடன் இருந்த நண்பர்கள் அழைத்தும் வரவில்லை என்கிறார்கள்.தாசரிபவன் என்பவருக்கு நீச்சல் தெரிந்து உள்ளது.  நீரின் ஆழத்தன்மை அதிகமாக உள்ளதாலும், அவன் மது அருந்தியதாலும், அவன் சுயநினைவு இழந்து நீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது.

மாணவர் தாசரிபவன் தெலுங்கானா மாநிலம் சித்திபட் பகுதியை சேர்ந்தவர் இவர் தந்தை பெயர் தாசரிராஜ் என கூறப்படுகிறது. இந்நிலையில் உடன் இருந்த மாணவர்கள் ஆவடி தீயணைப்பு துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் நீரில் மூழ்கி மாணவன் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

This post was last modified on ஆகஸ்ட் 9, 2023 9:13 மணி 9:13 மணி

Show comments
Published by
Veera
Tags: Student Swimming Telangana Vellanur Lake Veltech College Wine ஆவடி தீயணைப்பு தெலுங்கானா நீச்சல் மது மாணவர் வெள்ளனூர் ஏரி வேல் டெக் கல்லூரி