spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தலையங்கம்பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ! வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்!

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ! வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்!

-

- Advertisement -

பிரபாகரன் என்பவர் யார்? அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் உலகமே ஆச்சரியமும் வியப்பும் அடைவதற்கு காரணம் என்ன? இலங்கை, பதற்றத்துடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவசர அவசர மாக மறுக்கிறது. உளவுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது. அப்படி என்றால் பிரபாகரன் என்பவர் யார்?

தமிழன் யார் என்பதை உலகமே திரும்பிப் பார்க்க வைத்தவர். இலங்கையில் தமிழர்களின் போராட்ட வரலாற்றின் வாயிலாக உலகின் போராட்ட பாதையை தலைகீழாக மாற்றிக் காட்டிய ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், உலகளவில் மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன் என்பதை பெருமையுடன் கூறலாம்.

we-r-hiring

ஓடாத மானும் போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை என்று சொல்லி சோம்பிக் கிடந்த இனத்தைத் தட்டியெழுப்பியவர். பூமிப் பரப்பெல்லாம் தமிழின் விதை விதைக்கக் காரணமானவர்.

வாழ்வாதாரத்திற்குசென்ற இடத்தில் மறைந்து வாழ்ந்த தமிழர்களை நான் தமிழன் என்று துணிந்து சொல்ல வைத்தவர் பிரபாகரன் தான் .

இனித் தமிழர்களின் வரலாறு உறங்கும் நிலைக்குத் திரும்பச் செல்ல வாய்ப்பில்லை. அவர் அடியெடுத்து கொடுத்த போராட்ட மரபு மீண்டும் தொடரப் போகிறது.

கூலிகள் என்றும் வந்தேறி குடிகள் என்றும் நாதியற்றவர்கள் என்றும் தூற்றப்பட்ட உலகத் தமிழர்களை வலிமை பெற்று உரிமை கோர வைத்தவர் தலைவர் பிரபாகரன்.

இணையத்தில் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழக் காரணமானவர்.

பலரை வரலாறு படைக்கின்றது. ஒரு சிலர் தான் வரலாற்றைப் படைக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர் பிரபாகரன் என்பதை பெருமையுடன் சொல்லலாம்.

பிரபாகரன் தலைமையில் இலங்கை தமிழர்கள் எடுத்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் பக்கம் நிற்கின்றது. அவர் நடத்திய ஈழவிடுதலைப் போர் தார்மீக அடிப்படையிலானது.

“விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’ என்று பிரபாகரன் மிகச் சுருக்கமாகக் கூறியவர்.

விடுதலை என்ற இலட்சியத்தை நாம் எளிதாகத் தேர்ந்தெடுக்கவில்லை. வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் திணித்துள்ளது. தற்போது சுதந்திரத்திற்காக போராடுவதைத் தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டு வைக்கவில்லை என்று தமிழ் இனத்திற்கு பாடம் நடத்தியவர்.

பாதையை தேடாதே, அதை உருவாக்கு என்ற வாக்கியத்தை வாழ்க்கையாக மாற்றி உலகத்திற்கு உணர்த்தியவர்.

அந்த மாவீரனின் வாழ்க்கை பயணம் முடிவடைந்து விடவில்லை என்று கேட்கும் போது, அகம் மகிழ்கிறது.  அவர் விரைவில் வெளியே மீண்டும் வரப்போகிறார் என்ற வார்த்தை எம் இனத்திற்கு கிடைத்த ஊட்டச்சத்து மருந்தாக இருக்கிறது.

தன் இன மக்களுக்கு எதிராக நிகழ்ந்த அடக்கு முறைகளை அவர்கள் பாணியிலேயே திருப்பிக் கொடுத்த மாவீரன். உலக நாடுகளின் சூழ்ச்சியால்,  சதியால் ”வீழ்ந்தாலும் வீரன் சாவதில்லை” என்பதற்கு உதாரணமாக மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீண்டும் வருகிறார் ! வருவார் ! அவர் விட்டு சென்ற இடத்தில் இருந்து வரலாற்றை மீண்டும் எழுதுவார்.

MUST READ