Homeசெய்திகள்இந்தியா2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு

2026 மேற்கு வங்கத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு

-

- Advertisement -

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்  முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 23, 2026) காலை 7 மணிக்குத் தொடங்கியது. சுமார் 1,478 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயிக்க 3.60 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.2026 மேற்கு வங்கத் தேர்தல்:  காலை 9 மணி நிலவரப்படி 18.76% வாக்குகள் பதிவு
வட வங்காளத்தில் 8 மற்றும் தென் வங்காளத்தில் 8 என மொத்தம் 16 மாவட்டங்களில் பரவியுள்ள 152 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

​இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, காலை 9 மணி நிலவரப்படி மாநிலத்தில் 18.76% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,450 கம்பெனி மத்திய துணை ராணுவப் படைகளை (சுமார் 2.5 லட்சம் வீரர்கள்) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

we-r-hiring

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு (SIR), மாநிலத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 12% குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.​ பாஜாகவைப் பொறுத்தவரை, முதற்கட்டத் தேர்தல் என்பது வட வங்காளத்துடன் நேரடித் தொடர்புடையது. கடந்த 2021 தேர்தலில், இந்த 152 இடங்களில் பாஜக 59 இடங்களையும், திரிணாமுல் காங்கிரஸ் (TMC) 93 இடங்களையும் வென்றிருந்தன.

​தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸிற்கு, வடக்கில் பாஜகவின் எழுச்சியைத் தடுப்பது இந்தத் தேர்தலின் போக்கை தீர்மானிப்பதில் மிக முக்கியமானது.​

இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 அன்று நடைபெறும். அன்று கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குகள் அனைத்தும் மே 4 அன்று எண்ணப்படும்.

கர்நாடகா: ஓட்டு போட வந்ததால் நேர்ந்த சோகம் – பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து

MUST READ