spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!

உ.பி.யில் தனியார் பள்ளி பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயம்!

-

- Advertisement -

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளியில் பால்கனி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதற்காக பள்ளியின் முதல் மாடியில் உள்ள பால்கனியில் ஏராளமான மாணவர்கள் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக முதல் மாடி பால்கனி இடிந்து விழுந்தது. இதில் 4 மாணவ – மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.

we-r-hiring

இதனை அடுத்த அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை மிட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில படுகாயம் அடைந்த 5 மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ