ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீது “கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் வரி” (Widow and Destitute Cess) என்ற பெயரில் புதிய சிறப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
ஒரு லிட்டருக்கு 60 காசுகள் சிறப்பு வரி
புதிய வரி விதிப்பின்படி, மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் ஒரு லிட்டர் டீசல் மீது 60 காசுகள் சிறப்பு வரியாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் இந்தக் கூடுதல் வருவாய், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினரின் மறுவாழ்வுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.

எதற்காக இந்த வரி? – அரசு விளக்கம்
இந்தத் திடீர் வரி விதிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள ஹிமாச்சல் பிரதேச அரசு, இதன் மூலம் பெறப்படும் தொகை முழுவதும் கணவனை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்காக மட்டுமே முழுமையாகச் செலவிடப்படும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எரிபொருள் மீதான இந்தச் சிறிய அளவிலான வரி விதிப்பு, பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குடும்பங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“அவர் அவைக்கு வந்தாரா?” – அமித் ஷாவின் விவாத ஆஃபரை சாடிய பிரியங்கா காந்தி!
