Homeசெய்திகள்இந்தியா"டிஜிட்டல் பணமழையில் இந்தியா!" - ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.....

“டிஜிட்டல் பணமழையில் இந்தியா!” – ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!

-

- Advertisement -
இந்தியாவில் ‘யுபிஐ’ (UPI) வழியிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தை இதுவரை இல்லாத அளவிற்குப் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
"டிஜிட்டல் பணமழையில் இந்தியா!" - ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!
ரூ.28.9 லட்சம் கோடி எட்டிய வர்த்தகம்
இந்தியர்களின் ஒரு மாத யுபிஐ கணக்கு விவரங்களின்படி, ஒரே மாதத்தில் மட்டும் ரூ.28.9 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாதம் முழுவதும் மக்கள் சுமார் 2,270 கோடி முறை யுபிஐ வசதியைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு பரிவர்த்தனையின் சராசரி மதிப்பு ரூ.1,273 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில் மளிகைப் பொருட்களுக்காக மட்டும் மக்கள் ரூ.79,705 கோடி அளவுக்குச் செலவிட்டுள்ளதுடன், 374 கோடி முறை மளிகைப் கடைகளில் யுபிஐ பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் 145 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.
"டிஜிட்டல் பணமழையில் இந்தியா!" - ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!
80% சந்தையைக் கைப்பற்றிய ‘போன்பே’ & ‘கூகுள் பே’
இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகளில் 80 சதவீதப் பங்கை வெறும் இரண்டு செயலிகள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. அதில் ‘போன்பே’ (PhonePe) 46.2 சதவீத சந்தைப் பங்குடன் முதலிடத்திலும், ‘கூகுள் பே’ (Google Pay) 32.6 சதவீதப் பங்குடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து பேடிஎம் (7.9%), நவி (3.7%), சூப்பர்.மணி (1.9%), பீம் (1.0%) மற்றும் ஃபேம்ஆப் (0.9%) ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
வியாபாரிகளிடம் அதிகரிக்கும் பயன்பாடு
யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கையில் 3-ல் 2 பங்கு (63.5%) கடைகள் மற்றும் வணிகர்களுக்கே செல்கிறது. மீதமுள்ள 36.5 சதவீத பரிவர்த்தனைகள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்ற தனிநபர்களுக்கு இடையே நடைபெறுகின்றன. இருப்பினும், மொத்த பண மதிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது, 70 சதவீதப் பரிமாற்றங்கள் தனிநபர்களுக்கு இடையேயே (P2P) நடப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
"டிஜிட்டல் பணமழையில் இந்தியா!" - ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!
முன்னணியில் உள்ள தளங்கள் மற்றும் தொகையின் அளவு
எண்ணிக்கை அடிப்படையில் மளிகை மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் 373.9 கோடி பரிவர்த்தனைகளும், ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் 144.9 கோடி பரிவர்த்தனைகளும், உணவகங்களில் 124.2 கோடி பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு முன்னணியில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து ரீசார்ஜ், பெட்ரோல் பங்க், பெட்டிக்கடை, பேக்கரி, மருந்தகம், பால்கடைகள் மற்றும் டிஜிட்டல் தங்கம் வாங்குவதிலும் யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ளது.
பெரிய தொகை செலவுகளைப் பொறுத்தவரை, கடன் அடைத்தல் மற்றும் இ.எம்.ஐ வசூலுக்கு ரூ.69,033 கோடியும், பங்குச் சந்தை முதலீட்டிற்கு ரூ.60,945 கோடியும், எரிபொருள் செலவிற்கு ரூ.47,184 கோடியும் யுபிஐ மூலம் பரிமாறப்பட்டுள்ளன. சராசரி ஒரு பரிவர்த்தனைத் தொகையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு ரூ.1,367-ம், பெட்ரோல்/டீசலுக்கு ரூ.658-ம், மருந்தகங்களில் ரூ.423-ம் செலவிடப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு கடைகள் முதல் பெரிய முதலீடுகள் வரை அனைத்திலும் யுபிஐ பயன்பாடு இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையோடு பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளதை இந்தத் தரவுகள் தெளிவுபடுத்துகின்றன.
https://www.apcnewstamil.com/news/india/lpg-gas-cylinder-ekyc-deadline-extended-august-31/222345

MUST READ