Homeசெய்திகள்இந்தியாஎய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்தீப் தன்கர்!

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்தீப் தன்கர்!

-

- Advertisement -

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து இன்று (நவம்பர் 14) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

75 வயதான ஜக்தீப் தன்கர், கடந்த புதன்கிழமை காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு சில நிமிடங்கள் சுயநினைவு இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

முதலில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை PCR வாகனம் மூலம் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்குள்ள கார்டியோ-நியூரோ மையத்தில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இதயவியல் துறை மருத்துவர்களின் கண்காணிப்பில் பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டன.

இதயம், நரம்பியல் தொடர்பான பரிசோதனைகள்

ஜக்தீப் தன்கருக்கு இதயத்தின் செயல்பாடு மற்றும் நரம்பியல் தொடர்பான பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே மயக்கமடைந்த சம்பவங்கள்

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜக்தீப் தன்கருக்கு பலமுறை மயக்கம் மற்றும் சுயநினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் நெஞ்சுவலி காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொண்டார்.

மேலும், 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போதும் அவர் மயங்கி விழுந்தார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலும் வீட்டில் இரண்டு முறை சுயநினைவை இழந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியாவின் 14-வது குடியரசுத் துணைத் தலைவராக 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2025-ம் ஆண்டு ஜூலை வரை பதவி வகித்தவர் ஜக்தீப் தன்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 23-ல் கூடுகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

MUST READ