Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியின் வீடியோ நீக்கம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன்!

பிரதமர் மோடியின் வீடியோ நீக்கம்: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன்!

-

- Advertisement -

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக கடந்த 23-ஆம் தேதி நள்ளிரவில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செல்ஃபி வீடியோவில், “வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் புதிய மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார். இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

பிரதமர்

we-r-hiring

இதனிடையே, நேற்று காலை ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ திடீரென நீக்கப்பட்டது. இதுதொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத் துறை சார்பில் ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

மெட்டா உயரதிகாரிகளுக்குச் சம்மன்

மெட்டாவின் சர்வதேச விவகார தலைவர் ஜோயல் கப்லான் மற்றும் இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசேரி ஆகியோருக்குச் சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து மெட்டா நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரதமர் மோடியின் வீடியோ தவறுதலாக நீக்கப்பட்டது. அந்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. தெரியாமல் நடந்த தவறுக்காக மன்னிப்பு கோருகிறோம்” என்றார்.

மத்திய அரசின் அதிரடி நிலைப்பாடு

இருப்பினும், இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “மெட்டா நிறுவனத்தின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை. பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கியதை மிக தீவிர பிரச்சினையாக கருதுகிறோம். இதுதொடர்பாக மெட்டா நிறுவன மூத்த அதிகாரிகளை நேரில் வரவழைத்து விளக்கம் கோரப்படும்” என்று தெரிவித்தன.

தொடரும் கெடுபிடிகள்

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் அங்கமான இன்ஸ்டாகிராமில் சிறாரை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் விளம்பரங்கள் இடம்பெற்றது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், வாட்ஸ்அப் செயலியில் ‘யூசர் நேம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆவடி மாநகராட்சி சிற்றுண்டியில் பல்லி விழுந்த அதிர்ச்சி: சாம்பாரைச் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதி!

MUST READ