Homeசெய்திகள்இந்தியா"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை”- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

-

 

"ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை"- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ்!

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆண்டு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சக்திகாந்த தாஸ், “வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடர்கிறது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் பழைய நிலையிலேயே நீடிக்கிறது.

பண வீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது; பொருளாதார வளர்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது. இந்தியாவில் 645 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது.பொருளாதார வளர்ச்சிக்கான சூழல் வலுவாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் பிறந்தநாள்- சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் அஜித்குமார்!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதமே ரெப்போ எனப்படுகிறது.

MUST READ