Homeசெய்திகள்இந்தியாபவன் கல்யாண் விவாகரத்து எதிரொலி: 2017-ல் ரேணு தேசாய் எழுப்பிய கேள்வி மீண்டும் பேசுபொருள்!

பவன் கல்யாண் விவாகரத்து எதிரொலி: 2017-ல் ரேணு தேசாய் எழுப்பிய கேள்வி மீண்டும் பேசுபொருள்!

-

- Advertisement -

ஆந்திர மாநில துணை முதல்-அமைச்சரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் தனது மூன்றாவது மனைவி அன்னா கொனிடேலாவை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது இரண்டாவது மனைவியும் நடிகையுமான ரேணு தேசாய் முன்பு தெரிவித்த கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளன.

we-r-hiring

பவன் கல்யாண் கடந்த 2009-ஆம் ஆண்டு நடிகை ரேணு தேசாயை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2012-ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.

மறுமணம் குறித்து ரேணு தேசாய் தெரிவித்த கருத்து

கடந்த 2017-ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய ரேணு தேசாய், எதிர்காலத்தில் மறுமணம் செய்துகொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பவன் கல்யாணின் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து அவரை விமர்சித்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ரேணு தேசாய், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகம் காட்டும் இரட்டை நிலைப்பாட்டைக் கேள்வி எழுப்பினார்.

“நமது சமூகத்தில் ஆண்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால், பெண்கள் மற்றொரு திருமண உறவைப் பற்றி நினைத்தாலே அது பாவமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு பெண் தனது வாழ்நாள் முழுவதும் தனியாகவும் கவலையுடனும் வாழ வேண்டுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

பவன் கல்யாணுடனான உறவு குறித்துப் பேசிய ரேணு

மேலும், பவன் கல்யாணுடன் வாழ்ந்த காலத்தில் அவரை நெருக்கமாகப் புரிந்துகொண்டவர் தான்தான் என்றும் ரேணு தேசாய் குறிப்பிட்டிருந்தார். கணவராக மட்டுமின்றி நண்பராகவும், தன்னுடன் இணைந்து பணியாற்றியவராகவும் அவர் இருந்ததாகத் தெரிவித்திருந்தார்.

மூன்றாவது திருமணமும் பிரிவு அறிவிப்பும்

இதற்கிடையே, பவன் கல்யாண் கடந்த 2013-ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த அன்னா லெஸ்னேவாவை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். சுமார் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த இருவரும், பரஸ்பர புரிதல் மற்றும் மரியாதையின் அடிப்படையில் பிரிவதாகக் கூட்டறிக்கை மூலம் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரேணு தேசாய் முன்பு மறுமணம் குறித்து தெரிவித்த கருத்துகள் மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, திருமண உறவுகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவது குறித்த அவரது கேள்வி தற்போது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

13 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி! மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிவதாக அறிவித்தார் பவன் கல்யாண்!

MUST READ