Homeசெய்திகள்இந்தியாதிருப்பதியில் இந்த மாதம் 10 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து...

திருப்பதியில் இந்த மாதம் 10 நாட்கள் விஐபி பிரேக் தரிசனம் ரத்து…

-

- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நாளை (அக்டோபர் 7) ஆன்லைனில் வெளியிடுகிறது.

we-r-hiring

அக்டோபர் 12, 13, 14, 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள், அக்டோபர் 7-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என TTD தெரிவித்துள்ளது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 12 முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்

திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் அக்டோபர் 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் பல்வேறு வாகன சேவைகள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புரட்டாசி மாதத்தின் கடைசி வாரமும் இதே காலகட்டத்தில் வருவதால் திருமலையில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வரக்கூடும் என TTD தெரிவித்துள்ளது.

விஐபி மற்றும் சிறப்பு தரிசனங்களில் மாற்றம்

அதிக கூட்டத்தை கருத்தில் கொண்டு அக்டோபர் 11 முதல் 20-ம் தேதி வரை விஐபி பிரேக் மற்றும் சில சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரோட்டோகால் விஐபிக்களைத் தவிர, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகளின் பெற்றோர், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கான சிறப்பு தரிசனங்களும் இந்த காலகட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக TTD தெரிவித்துள்ளது.

மேலும், விஐபி பிரேக் தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் அக்டோபர் 10 முதல் 19-ம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு TTD அறிவுரை

நவராத்திரி பிரம்மோற்சவம் மற்றும் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு திருமலையில் அதிகளவில் பக்தர்கள் கூடும் வாய்ப்பு உள்ளதால், பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளுமாறு TTD கேட்டுக்கொண்டுள்ளது.

ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான அதிக தேவை காரணமாக, டிக்கெட் வெளியிடப்படும் நேரத்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்ய முயற்சிக்கலாம். இதனால் பிரபலமான நேரங்களுக்கான டிக்கெட்டுகள் மிகக் குறுகிய நேரத்திலேயே தீர்ந்து போக வாய்ப்புள்ளதாக TTD ஏற்கனவே தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை!

MUST READ