spot_imgspot_img
Homeசெய்திகள்இலக்கியம்192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடம்

192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடம்

-

- Advertisement -

உலகின் மிகச் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் பாஸ்போர்ட் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக சிங்கப்பூர் முதலிடம்விசா இன்றி அல்லது வருகை விசா மூலம் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்ற அடிப்படையில், உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் ஹென்லே பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது.

அந்த பட்டியலின்படி, சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் உள்ள 227 நாடுகளில் 192 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

we-r-hiring

இப்பட்டியலில், ஜப்பான் மற்றும் தென்கொரியா பாஸ்போர்ட்டுகள் 2ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு எளிதாக விசா இன்றி பயணம் மேற்கொள்ள முடியும்.

3-ம் இடத்தில் உள்ள டென்மார்க், ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 186 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்று ஹென்லே பட்டியல் குறிப்பிடுகிறது.

இதற்கிடையில், அமெரிக்க பாஸ்போர்ட் ஒரு புள்ளி சரிந்து 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா பாஸ்போர்ட் வைத்திருந்தால் 179 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது வருகை விசா மூலம் பயணம் மேற்கொள்ளாம்.

மற்றொரு பக்கம், இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் உலகில் 55 நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி அல்லது வருகை விசா மூலம் பயணம் செய்ய முடியும் என்றும் அந்த பட்டியல் தெரிவிக்கிறது.

உலக நாடுகளுக்கிடையேயான அரசியல் உறவுகள், தூதரக ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் போன்றவை பாஸ்போர்ட் சக்தியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ள நிலையில், சிங்கப்பூர் தனது வலுவான சர்வதேச உறவுகள் மூலம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

பாஜகவின் வருகைகள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது – அமைச்சர் ரகுபதி பேட்டி

MUST READ