அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன்- அண்ணாமலை
தமிழக பாஜகவில் சில தலைவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வேண்டுமென்று அண்ணாமலையை நிர்பந்திக்கின்றனர், ஆனால் அண்ணாமலை அதற்கு விருப்பமில்லை என்று தெரிவித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன். சாதாரண கட்சித் தொண்டராக இருந்து பணியாற்றுவேன். தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்கமுடியும். கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன்.
பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் 10 ஆம் தேதிவரை கட்சி பணிகளில் பிஸியாக இருப்பேன்” என்றார்.