spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியலில் வக்கில்லே ‘கண்ணியம் காட்டுங்க சீமான் அண்ணே...’ கதறும் தம்பிகள்..!

அரசியலில் வக்கில்லே ‘கண்ணியம் காட்டுங்க சீமான் அண்ணே…’ கதறும் தம்பிகள்..!

-

- Advertisement -

அரசியலில் கவனம் செலுத்துகிறாரோ இல்லையோ… உலமைப்பில் எப்போதும் கவனம் செலுத்துபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்நிலையில், வருடன் ஜிம்மில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்துள்ளார் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன். நடுவில் சீமானும், பக்கவாட்டில் சாட்டை துரைமுருகனும், ஜிம் பயிற்சியாளரும் அந்தப் புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், “2026க்கு அப்புறம் உங்களால கட்சி நடத்த முடியாது. பேசாம ஒரு ஜிம்ம லீசுக்கு நடத்துங்க.. பிழைச்சிப்பீங்க’’ என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

‘‘நேற்று வழக்கிற்காக திருச்சி கோர்ட்டில் ஆஜராக வந்த சீமான் அவர்களுடன் இருந்த சாட்டை துரைமுகனை கோர்ட் வளாகத்தில் இருந்த ஒருவரும் கண்டு கொள்ளவில்லையே… ஜல்லிக்கட்டு தலைவன் ராஜேஷ் அவர்களுக்கு இருந்த மரியாதை கூட உங்களுக்கு இல்லையே… என்ன அண்ணே இப்படி ஆயிடுச்சு உன் நிலைமை’’ என வாரி இறைத்துள்ளார்.

நாம் தமிழர் தம்பி ஒருவர் ‘‘இது போல் ஃபோட்டோ போடுவதை தவிருங்கள். என்னமோ அடியாட்கள் போல உள்ளது. அரசியலில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும். மக்களின் நம்பிக்கை பெற வேண்டும். அதற்கு நமது பேச்சு, உடை அனைத்தும் கண்ணியமாக இருக்க வேண்டும்’’ என அறிவுறுத்தி உள்ளார்.

 

MUST READ