Homeசெய்திகள்அரசியல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கமல், ரஜினி, வைரமுத்து வாழ்த்து...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கமல், ரஜினி, வைரமுத்து வாழ்த்து…

-

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று, தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் , வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : கமல், ரஜினி, வைரமுத்து வாழ்த்து...

கமல்ஹாசன் : “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என்று கூறியுள்ளார்.

வைரமுத்து : “உள்ளங்கவர் உதயநிதி!

கலைஞர் குடும்பம்
உங்களுக்குத் தந்தது
அறிமுகம் மட்டும்தான்

இன்னொரு முகம் இருக்கிறது;
அறிவு முகம்;
செயலால் மட்டுமே அடைவது

உங்கள் செயலால்
வாரிசு என்ற
வசை கழியுங்கள்

தளபதி மகனே வருக
தமிழர்க்கு மேன்மை தருக

அமைச்சர் உதயநிதிக்கு
வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் : “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.

MUST READ