spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தோல்வியிலும் வெற்றி... காங்., கூட்டணி கெத்து: மகாராஷ்டிரா தேர்தலில் சுவாரஸ்ய உண்மைகள்

தோல்வியிலும் வெற்றி… காங்., கூட்டணி கெத்து: மகாராஷ்டிரா தேர்தலில் சுவாரஸ்ய உண்மைகள்

-

- Advertisement -

மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மகாயுகதி கூட்டணியில் 132 இடங்களை கைப்பற்றி பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. ஷிண்டே சேனா 57 இடங்களையும், என்சிபி (அஜித் பவார் பிரிவு) 41 இடங்களையும் பெற்றுள்ளன.

மறுபுறம், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு 47 இடங்கள் மட்டுமே கிடைத்தன. சிவசேனா (யுபிடி) 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், என்சிபி (சரத் பவார்) 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

we-r-hiring

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, பாஜக மீண்டும் மாநிலத்தில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் 12.37% வாக்குகள் பெற்றுள்ளது.

அஜீத் பவாரின் என்சிபியை விட சரத் பவாரின் என்சிபி 2. 28% அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது, ஆனால் சரத் பவாரின் 10 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதேசமயம் அஜித் பவாரின் 41 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் ஷிண்டே சேனாவின் வாக்கு சதவீதம் கிட்டத்தட்ட சமமாக உள்ளது. ஆனால் காங்கிரஸ் 16 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. அதே நேரத்தில் ஷிண்டே சேனா 57 இடங்களை வென்றது.

உத்தவ் சேனா, ஷிண்டே சேனாவை விட 2.48% குறைவான வாக்குகள் மட்டுமே பெற்றது. ஆனால் உத்தவ் 20 எம்.எல்.ஏ-க்களை மட்டுமே வென்றார். அதே நேரத்தில் ஷிண்டே 57 எம்.எல்.ஏ-க்களை வென்றார். சமாஜ்வாதி கட்சி, சிபிஐயை விட பிஎஸ்பி அதிக வாக்குகளைப் பெற்றது. ஆனால் பிஎஸ்பியிலிருந்து ஒரு எம்எல்ஏ கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா, மாநிலம் முழுவதும் 125 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியது. அக்கட்சி 1.55% வாக்குகளைப் பெற்ற நிலையில், டெபாசிட் எந்த இடத்திலும் கிடைக்கவில்லை. நோட்டாவுக்கு 0.72% அதாவது 4,61,886 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த எண்ணிக்கை பிஎஸ்பி மற்றும் எஸ்பி பெற்ற வாக்குகளை விட அதிகம்.

எஸ்பி இரண்டு இடங்களை வென்றது. ஆனால் 0.38% வாக்குகள் மட்டுமே பெற்றது. AIMIM ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. 0.85% வாக்குகள் கிடைத்தன. அதிகபட்சமாக 200 இடங்களில் போட்டியிட்ட வஞ்சித் பகுஜன் அகாடியின் வேட்பாளர்கள் யாரும் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

MUST READ