spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அரசியலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? ரஜினியின் சகோதரர் பேட்டி

அரசியலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? ரஜினியின் சகோதரர் பேட்டி

-

- Advertisement -

அரசியலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கு? ரஜினியின் சகோதரர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தலிலும் யாருக்கும் ரஜினியின் ஆதரவு கிடையாதென அவரது சகோதரர் சத்யநாராயணன் ராவ் தெரிவித்துள்ளார்.

சந்திராயன் 3 செயற்கைகோள் வெற்றிகரகமாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ நிறுவனம் தரையிரக்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றது. சந்திராயன் 3 திட்டத்தின் இயக்குனராக உள்ள விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட வீரமுத்துவேலுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் விழுப்புரம் திருவிக வீதியில் அவரது இல்லத்தில் வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தென் துருவத்தில் சந்திராயன் 3 தரையிரங்கி சாதனை படைத்ததற்கு வீரமுத்துவேலின் தந்தை பழனிவேலை நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்ய நாராயனண் ராவ் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

we-r-hiring

Rajinikanth,தம்பியின் உடல்நலனே முக்கியம்: ரஜினிகாந்த் சகோதரர் பேட்டி! - my  brothers health is important says rajinikanth brother satyanarayana -  Samayam Tamil

அதனை தொடர்ந்து பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ், “ரஜினியின் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. திரையரங்குகளில் இன்றும் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது. ரஜினிக்கும் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவருக்கும் பல வருடங்களாக பழக்கம் உள்ளது. மடங்களுக்கு செல்வது, பாபாவை தரிசனம் செய்வது, இமயமலை செல்வது போன்றவற்றை ரஜினி வழக்கமாக வைத்துள்ளார். அதனடிப்படையில் தான் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை. தேர்தலில் இப்போதும் எப்போதும் ரஜினியின் ஆதரவு இல்லை” என்றார்.

MUST READ