Homeசெய்திகள்அரசியல்மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை - ஜி.கே.வாசன்

மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற கோரிக்கை – ஜி.கே.வாசன்

-

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் ஹைகோர்ட் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற வேண்டும் என மாநிலங்களவையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மாநிலங்களவையில் ஆர்பிட்டரேஷன் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று பேசும்போது, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

பிற மாநிலங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனவும் ஜி்கே.வாசன் மாநிலங்களவையில் குறிப்பிட்டுள்ளார்.

உயர்நீதிமன்ற பெயர் மாற்ற கோரிக்கையில் விரைவாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மெட்ராஸ் என்கிற பெயர் தற்போது இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நினைவுகூர்ந்தார். ஆகவே உயர்நீதிமன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயரிட வேண்டும் என விளக்கினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.

தற்போது உயர்நீதிமன்றம் மெட்ராஸ் ஹைகோர்ட் என அழைக்கப்படுகிறது என்று அவர் மாநிலங்களவையில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ