1,500 மாணவர்களை சந்திக்கும் விஜய்! அரசியலில் கால்பதிக்க திட்டம்?
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலர் அரசியலுக்கு வர தொடங்கி விட்டார்கள். எம்ஜிஆர் முதல் கமல் வரை தற்போது அரசியலில் முத்திரை பதித்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது தளபதி விஜய் அரசியலில் நுழையப் போகிறார் என விஜய் மக்கள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ‘மதுரையில் விரைவில் மாநாடு’, ‘திருச்சியில் மாநாடு’ என போஸ்டர் ஒட்டி அதகளப்படுத்தி வருகின்றனர். விஜயும் அவர் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அரசியல் சம்பந்தமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி, தான் அரசியலில் நுழையப் போவதை உறுதிப்படுத்தி வருகிறார். தன்னுடைய மக்கள் இயக்க உறுப்பினர்களையும் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களை விஜய் சந்திக்கிறார். ஜூன் மாதம் 2-ஆம் வாரத்தில் மாணவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெற்றோர் இல்லாத நிலையிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.