Homeசெய்திகள்ராமர் வேஷம் போட்டாச்சு… அடுத்து சிவனாக களமிறங்கும் பிரபாஸ்!

ராமர் வேஷம் போட்டாச்சு… அடுத்து சிவனாக களமிறங்கும் பிரபாஸ்!

-

- Advertisement -

விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வரும் படத்தில் பிரபாஸ் சிவனாக நடிக்கிறாராம்.

விஷ்ணு மஞ்சு நடிப்பில் கண்ணப்பா என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப் படத்தில் பிரபாஸ் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கடவுள் சிவனாக நடிக்க இருக்கிறாராம்.

we-r-hiring

இந்தப் படம் நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திரைப்படம். எனவே படத்திற்கு மேலும் மதிப்பு கூட்ட பிரபாஸை சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். 

பாலிவுட் நடிகை கிருத்தி சனோனின் சகோதரி நூபுர் சனோன் இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். 

பருச்சுரி கோபாலகிருஷ்ணா, புர்ரா சாய் மாதவ், தோட்ட பிரசாத் ஆகியோர் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளனர். மணி சர்மா மற்றும் ஸ்டீபன் தேவசி இருவரும் இணைந்து படத்திற்கு இசையமைக்கின்றனர். 

அவா என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 பிரேம்ஸ் ஃபேக்டரி நிறுவனங்கள் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றன. படத்தில் பிரபாஸ் இணைய இருப்பதாக தகவல் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

MUST READ