spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - இலங்கை அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – இலங்கை அணி வெற்றி

-

- Advertisement -

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர்.

we-r-hiring

இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி இலங்கை அணியின் சிறப்பான பந்துவிச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கேப்டன் ரோகித் சர்மா மட்டும் பொறுப்புடன் விளையாடி 64 ரன்கள் எடுத்தார். 42.2 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 32 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1.-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வாண்டர்சே 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.

 

 

MUST READ