spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!

-

- Advertisement -

 

ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!
Photo: BCCI

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.

we-r-hiring

ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!

ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்களை எடுத்தது. இதனிடையே, மழைக் குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மழை பெய்ததன் காரணமாக, ஆப்கானிஸ்தானுடனான இறுதிப் போட்டி ரத்துச் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, புள்ளிகள் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தங்கம் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாமிடம் பிடித்த ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப்பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்”- இந்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்!

பதக்கப் பட்டியலில் 28 தங்கம், 35 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 104 பதக்கங்களுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

MUST READ