Homeசெய்திகள்விளையாட்டுவெற்றி பாதைக்கு திரும்புமா சென்னை - கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!

வெற்றி பாதைக்கு திரும்புமா சென்னை – கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்!

-

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறும் 22வது லீக் போட்டியில் சென்னைvsகொல்கத்தா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 21 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 22வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சென்னை அணி இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

 

இன்று நடைபெறவுள்ள 22வது ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் லைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் இரண்டு வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் மூன்றையும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் 28 போட்டிகளில் சந்தித்துள்ளன. இதில் 18 போட்டிகளில் சென்னை அணியும் 10 போட்டிகளில் கொல்கத்தா அணியும் வெற்றியை பெற்றுள்ளன..

 

MUST READ