Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி - டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி – டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்

-

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.   இதுவரை நடைபெற்ற  நான்கு போட்டிகளில், முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும், அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஜ் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர். ஏற்கனவே இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளதால் இந்த போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேவேளையில் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்ய இந்திய அணியும், இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்தும் தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

MUST READ