தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாகப் பந்து வீசி 15 ரன்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
சூது கவ்வும் 2 படத்தின் சூடான அப்டேட் இதோ
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. கேப்டவுனில் நடந்த போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தென்னாப்பிரிக்கா அணி 23.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 55 ரன்களை மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக வெர்ரைன் 15 ரன்களும், டேவின் பெடிங்காம் 12 ரன்களும் எடுத்தனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய கோரி வழக்கு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் அபாரமாக பந்து வீசி 15 ரன்களுக்கு 6 விக்கெட் கைப்பற்றினார். அதேபோல், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.